என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாய்னா நேவால்"
- பேட்மிண்டனை காட்டிலும் கிரிக்கெட் கடினமானது அல்ல என சாய்னா நேவால் தெரிவித்தார்.
- சானியா நேவாலிடம் கொல்கத்தா வீரர் ரகுவன்ஷி மன்னிப்பு கோரினார்.
பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.
இந்நிலையில் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என கடந்த மாதம் சாய்னா நேவால் தெரிவித்தார்.
இதற்கு கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பதலளிக்கும் வகையில், நீங்கள் பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கி பாருங்கள் அப்போது தெரியும் என கூறினார். இந்த கருத்து ரசிகர்களிடையே எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
இதனையடுத்து அந்த கருத்து தொடர்பாக சாய்னா நேவாலிடம் ரகுவன்ஷி மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்டில் சாய்னா நேவால் பேசியுள்ளார்.
விராட் கோலி, ரோகித் போன்று ஆக வேண்டும் பலர் ஆசைப்படுவார்கள். ஆனால் சில வீரர்களால் மட்டும் தான் அதை அடைவார்கள். அதை நான் திறமை என்று நெனைக்கிறேன். நான் ஏன் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும்.
பும்ரா பேட்மிண்டன் விளையாடினால் அவர் என்னுடைய 300 கிமீ வேகத்திலான ஸ்மாஷ்-ஐ எதிர்கொள்ள முடியாது.
நாம் நமது நாட்டுக்குள்ளே இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இங்கே இடம் உள்ளது. ஆனால், நீங்கள் மற்ற விளையாட்டுக்கும் மதிப்பு கொடுங்கள். எப்போதும் நாம் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீதுதான் கவனம் செலுத்துகிறோம்.
நம்மிடம் எத்தனை பேட்மிண்டன் அகாடமிகள் உள்ளன? கிரிக்கெட்டில் எத்தனை அகாடமிகள் உள்ளன. பேட்மிண்டன் விளையாட்டுக்கு போதுமான வசதிகள் இருந்தால் தரமான வீரர்கள் உருவாகுவார்கள்" என்று பேசியுள்ளார்.
- காமன்வெல்த் போட்டியில் சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
- டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என தெரிவித்தார்.
புதுடெல்லி:
பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.
இந்நிலையில் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என தெரிவித்தார். இதற்கு கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பதலளிக்கும் வகையில், நீங்கள் பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கி பாருங்கள் அப்போது தெரியும் என கூறினார். இந்த கருத்து ரசிகர்களிடையே எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
இதனையடுத்து அந்த கருத்து சானியா நேவாலிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.
ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவின் மூலம் விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.
- பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.
டோக்கியோ:
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. அதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும், பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அதேபோல கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் இஷான் பத்நாகர்-தனிஷா கிரஸ்டோ இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
மறுபுறம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து வியட்நாம் வீராங்கனையை தோற்கடித்தார்.
- இதேபோல், இந்தியாவின் சாய்னா நேவால் சீன வீராங்கனையை வென்றார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹூ பிங் ஜியாவோவுடன் மோதினார். இதில் சாய்னா 21-19, 11-21, 21-17 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமின் துய் லின் நுயெனுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 19-21, 21-19, 21-18 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த், காஷ்யப் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
- இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-11 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் லியானி டானை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-18, 21-14 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான மாளவிகா பான்சோத்தை வீழ்த்தி இந்திய ஓபன் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 66-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா 21-16, 21-11 என்ற நேர்செட்டில் 12-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பானுக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 21-16 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 77-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத் 21-17, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான சக நாட்டு வீரர் ஸ்ரீகாந்தை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. ஸ்ரீகாந்தை போல் மற்ற இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் வர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.
இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. பிவி சிந்து காய் யன்யன்-ஐ எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 19-21, 9-21 நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றமடைந்தார்.
சாய்னா நேவால் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். இதில் சாய்னா முதல் செட்டை 13-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 23-21 எனக் கைப்பற்றினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் 16-21 இழந்து வெளியேறினார். யமகுச்சிக்கு எதிராக 9 ஆட்டத்தில் 8 முறை சாய்னா தோல்வியடைந்துள்ளார்.
ஆண்களுக்கான காலிறுதி ஒன்றில் சமீர் வர்மா ஷி யுகியை எதிர்கொண்டார். இதில் 10-21, 12-21 என எளிதாக தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவால் கொரியாவின் கிம் கா இயுன்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-13, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். சாய்னா அடுத்த சுற்றில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொள்கிறார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சமீர் வர்மா ஹாங்காங் வீரர் கா லாங் அங்குஸை 21-12, 21-19 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாய்னா 3-10 என பின்தங்கிய நிலையில் இருந்தபோது, கரோலினா மரினுக்கு தொடைப்பகுதியில் (hamstring injury) காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். ஆகவே, சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்தி கிதாம்பி இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 18-1, 19-21 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் மற்றொரு இந்தோனேசிய வீராங்கனை பிட்டிரியானி பிட்ரியானியை 21-17, 21-15 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஜப்பானைச் சேர்ந்த கென்டா நிஷிமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-14, 21-9 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்